பகிர்தல்

உங்களுடன் பகிர சில பல உருப்படியான/ அல்லாத விஷயங்கள்

சாருவின் பாசாங்கற்ற வெளிப்படையான எழுத்துக்களை விரும்பிப் படிப்பவன் நான். அவருடைய முதல் "நாவலான எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ·பேன்சி பனியனும்" படித்த போது நாவலின் மரபை அநாயசமாக தாண்டிச் சென்றதோடு மற்றவர்கள் "தப்பு தப்பு" என்று கன்னத்தில் போட்டுக் கொள்கிற விஷயங்களை அங்கதத்துடன் பதிவு செய்திருந்ததால் மிகவும் பிடித்திருந்தது.
அவர் தொடர்ந்து எழுதிவரும் கோணல் பக்கங்களின் சமீபத்திய பதிவை பார்த்த போது சற்றே விநோதமாக இருந்தது. அவர், உயிர்மையில் பாகவதைரைப் பற்றியும் சின்னப்பாவைப் பற்றியும் எழுதி வரும் போதே எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது, பிலிம் நியூஸ் ஆனந்தனுடன் போட்டி போட முயல்கிறாரா என்று. ஏனெனில் இந்த மாதிரி கட்டுரைகளை எழுத நிறைய பேர் இருக்கிறார்கள். பிரத்யேகமான அயல்மொழி எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி (ப.சிங்காரம் என்கிற அற்புதமாக எழுத்தாளரை சாருவின் மூலமாகத்தான் கண்டு கொண்டேன்) அவர் எழுதியிருந்த கட்டுரைகளை தொடர்ந்து படித்திருந்தவன் என்கிற முறையில் இந்த சினிமாக் கட்டுரைகள் எனக்கு சாதாரணமாகவே பட்டது.

இப்போது சமீபத்திய கட்டுரைக்கு வருவோம். பாபாவின் படத்திலிருந்து விபூதி கொட்டுவதாகவும், பாபாவை காணச் சென்ற நண்பருக்கு தங்கச் சங்கிலி கிடைத்ததாகவும், இன்னும் பல பாபா... மகிமைகளை எழுதியிருந்தார். தங்கச் சங்கிலி வாங்க வேண்டுமென்றால் ஜி.ஆர்.டி.தங்கமாளிகைக்கு போனால் போதுமே, எதற்கு நள்ளிரவிலிருந்து கால் கடுக்க சிறுநீர் கூட கழிக்காமல் காத்திருக்க வேண்டுமென்று எனக்குப் புரியவில்லை. (ஜி.ஆர்.டியில் நகைக்கு காசு கேட்பார்களே, அதனால் இருக்குமோ?)
பொதுவாகவே தீவிரமாக நாத்திகம் பேசுபவர்கள், நாடி தளர்ந்த காலத்தில் ஆத்திகத்தின் பக்கம் சாய்ந்து விடுவதை காண முடிகிறது. சாருவும் அந்த திசையை நோக்கி போகிறாரோ என்னமோ? கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற கேள்விக்கு "இருக்கட்டும்" என்று யாரோ சொன்னார்கள். நானும் அந்தக் கட்சிதான்.

()

விஜய் டி.வியில் 25.02.07 (ஞாயிறு) காலை 11.00 மணிக்கு (இந்திய நேரப்படி) "நாளை" என்றொரு படம் திரையிடுகிறார்கள். இதுவரை பா¡க்கதாவர்கள், மனைவிக்கு சப்பாத்தி பிசைந்து கொடுத்து, துணிதுவைத்து, வீடு மெழுகி இன்னும் நேரம் மிச்சமிருக்கிற கனவான்கள் இந்தப் படத்தை முயற்சிக்கலாம். புதுமுக இயக்குநர் என்று அலட்சியமாக பார்த்த போது படத்தின் "டிரீட்மெண்ட்" என்னை கவர்ந்தது. இதில் நட்ராஜ் என்கிற ஆரம்ப கால ரஜினிகாந்த்தை நினைவுப்படுத்துகிற நடிகர், திறமையாக நடித்திருக்கிறார். பிறகு ஏன் காணாமற் போனார் என்று தெரியவில்லை.

நாளை, "நாளை" பாருங்கள்.

இந்தப் படத்தைப் பற்றிய பிரகாஷின் பழைய பதிவு.

()

மதூர் பண்டார்க்கரின் படங்கள் சில பார்த்திருக்கிறேன். சாந்தினிபார், page3, (கார்ப்பரேட் இன்னும் பார்க்கவில்லை) என்று எல்லாப் படங்களுமே ஜகஜ்ஜோதியான இந்தி சினிமாக்களிலிருந்து விலகி மாற்று முயற்சிகளில் இறங்கியிருப்பது போல் படும். இவரின் சமீபத்திய படமான Traffif Signal-ஐ இந்தி தெரியாததாலும் நேரம் கிடைக்காததாலும் பார்க்க முயற்சிக்கவில்லை. பார்த்தவர்கள் எப்படியிருக்கிறது என்று பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

11 comments:

test mail. pl. ignore.

சாரு நிவேதிதாவை தொடர்ந்து படிப்பவன் என்ற முறையில்

அவர் எழுத்து மட்டுமல்ல அவருடைய கருத்துகளும் non-linear முறையை சேர்ந்ததுதான். ஆச்சர்யம் என்னவென்றால் நீங்கள் ஆச்சர்ய படுவதுதான்.

Traffic Signal பார்த்தேன். உண்மையை சொல்லப் போனால் மது பண்டார்கரின் 4 படங்களில் 3 படங்கள் பார்த்திருக்கிறேன் (Page 3 தவிர). களம் புதிது. மற்றபடி கதையும், சொல்லிய விதமும் புதிதாக ஒன்றும் இல்லை.

இப்பொழுது இந்த மாதிரி படங்கள் நிறைய வருகின்றது. ராகுல் போஸ், கொங்கனா சென், ரன்வீர் ஷெனாய், கேகே மேனன், ரஜத் கபூர் போன்றவர்கள் parallel சினிமாவிகென்றே நேர்ந்து விட்டவர்கள் போல் நிறைய நடிக்கிறார்கள்.

சமீபத்தில் நான் ரசித்த இந்த மாதிரி படங்கள் - Mixed Doubles மற்றும் அபர்னா சென்னின் 15 Park Avenue. சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்க தவறாதீர்கள்.

சாரு மேட்டர்... ரொம்ப 'வீக்'காக உள்ளது. காற்றிலிருந்து விபூதி, தங்க மோதிரம், தங்கச் சங்கிலி என்று பலரும் சொல்லிவிட்டார்கள். இப்பொழுது சாரு ஏன் திடீரென்று அற்புதங்களுக்குத் தாவியுள்ளார் என்று புரியவில்லை.

ஒரு விதத்தில் blog எழுதுபவனுக்கு இருப்பது போன்ற பிரச்னை சாருவுக்கும் இருக்கலாம். இந்த வாரக் கந்தாயத்துக்கு எதை எழுதுவது என்று...

அடுத்த வாரம் நல்லதாக ஏதாவது எழுத அந்த பாபா அருள் புரியட்டும்...

traffic signal
அவரின் மற்றய படங்களைப் போலவே நல்ல படம் தான். மனசை நெகிழவைக்கும் காட்சிகள் .

சாரு வீக்கா எல்லாம் எழுதல. படு சோக்கா எழுதியிருக்கிறார். பாபாவை இதை விட கேவலாம எப்படி எழுத முடியுமென் தெரியவில்லை. ரஸ்புடினோட ஒப்பீடு செய்யும் போதே தெரியவில்லையா, கடைசியில் ஒரு குறிப்பில் அது இல்லை என்று சொன்னாலும் கூட.

//சாருவின் பாசாங்கற்ற வெளிப்படையான எழுத்துக்களை விரும்பிப் படிப்பவன் நான்.//

நானும் அப்படி தான்.

ஆமா, non-linear முறை என்றால் என்ன? யாராவது விளக்கமுடியுமா?

Thanks!

முற்றில்

ஆபிதீன் கதையைத் திருடி புத்தகம் போட்டவன் எல்லாம் ஒரு எழுத்தாளன். அந்த நாதாறியை எல்லாம் பெரிய எழுத்தாளன் என்று புகழும் பெயிண்டு அடிக்கும் பயல்கள் எல்லாம் ஒரு பிறப்பு.

த்த்தூ... நாண்டுகிட்டு சாகலாம்!

//ஆமா, non-linear முறை என்றால் என்ன? யாராவது விளக்கமுடியுமா?
//
இப்படி ஒரு கேள்வி வரும்னு தெரிஞ்சா நான் கொஞ்சம் 'பார்த்து' பின்னூட்டம் போட்டிருப்பேன் :-). முதலிலே சொல்லிவிடுகிறேன், எனக்கு இதைப் பற்றி எல்லாம் அவ்வளவாக ஞானம் கிடையாது.

linear-writing என்றால் நேர் பாதையில் பயனிப்பது. நாம் படிக்கும் பெரும்பாலான சமாச்சாரங்கள் இந்த மாதிரி ஒரு தெளிவான வடிவமைப்பில் இருக்கும். அதாவது படிப்பவர்களின் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற முறையில் அமைந்திருக்கும்.

கதைகள், கட்டுரைகள், பாட புத்தகங்கள் இப்படி பலவும் பெரும்பாலௌம் linear எழுத்து முறையை சார்ந்தது.

இப்படி எல்லாமே ஒரு கட்டமைப்பு, முறைப்படுத்தப்பட்ட வடிவம் கொண்டிருந்தால் அதற்கு ஒரு மாற்று உண்டல்லவா? அதுதான் non-linear முறை. உண்மையில் பார்த்தால் மனித மனம் இந்த வகையில்தான் இயங்குகிறது. அதை நாம்தான் பலவித கட்டுபாடுகளிட்டு ஒரு தெளிவான (என்று நாம் நினைக்கும்) வடிவமைப்பிற்கு கொண்டு வருகிறோம்.

non-linear எழுத்திற்கு, கதைகளில் சில உதாரணங்கள் சொல்கிறார்கள். படிப்படியாக கதையை சொல்லாமல் சட்டென்று முடிவை சொல்லிவிட்டு மீதியை சொல்வது. இன்னும் கொஞ்சம் சிந்தித்தால், நமது browsing அனுபவம் பல சமயம் non-linear ஆகத்தான் இருக்கிறது. எதையோ தேடி, எதையோ படித்து, வேறு எதுவோ புரிந்து கொள்கிறோம்.

சாருவின் 'ஜீரோ டிகிரி' மற்றும் 'எக்ஸிடென்ஷியலிஸமும், பேன்ஸி பனியனும்' போன்ற ஆக்கங்கள் இந்த வகை என்று அவரே சொல்வார். அவருடைய கோணல் பக்கங்கள் (தற்போதைய தப்புத்தாளங்கள்) படித்த அனுபவத்தில், அவரின் இந்த 'கட்டுடைக்கிற' இயல்பு கொஞ்சம் புரிகிறது.

அவரை பற்றிய நிறைய விமர்சனங்கள். குற்றச்சாட்டுகள். நமக்கே கூட சில சமயம் படித்து முடித்தவுடன், அவருக்கு சூடாக ஏதாவது எழுத வேண்டும் என்று மனம் பரபரக்கும்.

இத்தனைக்கும் மேல் அவர் எழுத்திற்கு ஒரு முக்கிய இடம் இருக்கத்தான் செய்கிறது.

சாருவைச் சிரிக்கப் படிப்பேன்!
இதையும் படித்துவிட்டு; விழுந்து விழுந்து சிரித்தேண்;
விட்டுத்தள்ளுங்க

Sridhar Venkat, மிக்க நன்றி!

'ஜீரோ டிகிரி' , நானும் பாதி படித்தேண். ஒரு level-கு மேல continue பண்ண முடியலை.

ஆனால், என் தோழி படித்து விட்டு பிடித்து இருந்தது என்றள்.

//எதையோ தேடி, எதையோ படித்து, வேறு எதுவோ புரிந்து கொள்கிறோம்.
//

என்னைப் போல ;-)
//
அவரை பற்றிய நிறைய விமர்சனங்கள். குற்றச்சாட்டுகள். நமக்கே கூட சில சமயம் படித்து முடித்தவுடன், அவருக்கு சூடாக ஏதாவது எழுத வேண்டும் என்று மனம் பரபரக்கும்.
//

முற்றிலும் உண்மை!

யோகன் பாரிஸ்,
//
சாருவைச் சிரிக்கப் படிப்பேன்!
இதையும் படித்துவிட்டு; விழுந்து விழுந்து சிரித்தேண்;
//

சிலது அப்படி உண்டு. எல்லாவட்யும் அப்படி எடுத்து கொள்ள முடியவில்லை.
குறிப்பாக, அவருடைய இளமை பருவம்...!

சாருநிவேதிதா பற்றி இவ்வளவு பேர் எழுதியுள்ளார்கள் என்பது சந்தோஷமான விஷயம். யாரோ 100 பேருக்காக எழுதும் எழுத்தாளர் என்று சாரு இனி சொல்ல முடியாது, தமிழில் இலக்கிய வட்டம் விரிகிறது மகிழ்சியாக இருக்கிறது, சாரு தான் உணர்ந்ததை எழுதுகிறார் அதற்கான காரணம் எல்லோரையும் திருப்தி படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும் என நினப்பது தவறு அது அவர் வேலையும் இல்லை, ஒரு எழுத்தால் சமுதாயம் அமைதி வழியில் சிந்திக்கவும் சுகப்படவும் முடிந்தால் அதுதான் இலக்கியத்தின் வெற்றி.