பகிர்தல்

உங்களுடன் பகிர சில பல உருப்படியான/ அல்லாத விஷயங்கள்

நான் சுரேஷ் கண்ணன். ஏற்கெனவே "பிச்சைப் பாத்திரம்" என்றொரு வலைப்பதிவில் எழுதி வருவது உங்களில் யாருக்காவது தெரிந்திருக்கலாம். இன்னொரு பதிவை ஆரம்பிக்க வேண்டுமென்கிற நீண்ட நாள் எண்ணத்தை இப்போதுதான் நிறைவேற்றி இருக்கிறேன். ஆரம்பித்த பதிவிலேயே இன்னும் ஒழுங்காக எதையும் எழுதிக் கிழித்து விட வில்லையே என்கிற சிலரின் முணுமுணுப்பு பலமாகவே என்னுள் கேட்கிறது. ஏனெனில் இது எனக்குள்ளும் எழுந்த கேள்விதான்.

நூல்கள் பற்றிய சிறு அறிமுகம், திரைப்பட மற்றும் இலக்கிய விழாக்கள் பற்றிய அறிவிப்பு, சில சுவாரசியமான செய்திகள், தொலைக்காட்சி நிகழச்சிகள் என்று என்னை கடந்து செல்கிற அனைத்தையும் பற்றி எழுத வேண்டுமென்று நினைத்து இத்தனை சிறிய பத்திக்கு ஒரு பதிவு அவசியமா என்று நினைத்து பல பதிவுகளை எழுதமாலேயே விட்டிருக்கிறேன். எனவே அவ்வாறான சிறிய பதிவுகளுக்கென்று ஒரு வலைப்பதிவு அவசியம் என்று எப்பவோ தோன்றியது இப்போதுதான் சாத்திமாயிற்று. சிறுநீர் கழித்து முடித்து விடும் நேரத்தில் ஒரு வலைப்பதிவை சொந்தமாக்கிக் கொள்ள முடியும்தான் என்றாலும் இது நீண்ட அவகாசம்தான் என்று எனக்கே தெரிகிறது.

உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள நினைப்பதையெல்லாம் இங்கே காண முடியும். அவற்றை வரவேற்பதும் நிராகரிப்பதும் இனி உங்கள் கையில்.

6 comments:

ஐயா சுரேஷ்,

சிறுநீர் கழிப்பதற்குள் பதிவை முடித்து விடலாம் என்று சொல்லியதன் மூலம் நீர் ஒரு முன்நவீனத்துவவியாதி என்று நிரூபித்து விட்டீர்.

ஏதோ ஒரு பதிவில் ஏதாவது எழுதித் தொலையுமய்யா.

புதுப்பதிவுலயாவது மொத குரல் நல்ல்தா கேட்கக்கூடாதான்னு நீரு நெனச்சிருந்தா... ஊழ்வினைன்னு நெனச்சு சமாதானப்படும். வேற வழி?

சாத்தான்குளத்தான்

வாழ்த்துக்கள் சுரேஷ். நல்ல இடுகைகளை தாருங்கள்.

சிறுநீர் கழித்து முடித்து விடும் நேரத்தில் ஒரு வலைப்பதிவை சொந்தமாக்கிக் கொள்ள முடியும்தான் என்றாலும் இது நீண்ட அவகாசம்தான் என்று எனக்கே தெரிகிறது

Is not constipation the in thing
in literary circles now :)

நல்ல விசயம் சுரேஷ்.

ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்!

-மதி

: ) gr8 : )

நல்ல விஷயம் சுரேஷ்,

தொடர்ந்து எழுதுங்கள்.