நீண்ட நாள் கழித்து டிவிட்டருக்கு சென்ற போது நாராயண் இந்தப் பதிவை பரிந்துரைத்திருந்தார். படித்துப் பார்த்தேன். அற்புதமான நகைச்சுவை. இந்த மாதிரி தரமான நகைச்சுவைக் கட்டுரையை உருவாக்குவது அரிது. அன்றாட வாழ்வில் நாம் படும் அவஸ்தைகளை முன்வைத்து அதையே நகைச்சுவையாக்கி அதை நம்மிடமே காண்பிக்கும் போது சுவாரஸ்யமாக இருக்கிறது. பள்ளிக்குச் செல்லும் சிறுவர்/சிறுமி வீடுகளில் இருக்கும் ஒவ்வொருவரும் இதில் வரும் சம்பவங்களை அனுபவித்திருப்பர்.
நங்கையை நான் குளிப்பாட்டும்போது ஒரு நாள்கூட அவள் வம்பு செய்வது இல்லை. அவளுடைய அம்மாவிடம்மட்டும்தான் தினந்தோறும் கலாட்டா பண்ணி அடி வாங்கிக்கொள்கிறாள்.
என்.சொக்கன் மிக அருமையாக எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.
3 comments:
பகிர்ந்துரைக்கு நன்றி சுரேஷ். அப்புறம், இந்த சட்டை நல்லா இருக்கு :-) வாராவாரம் சட்டை மாத்தறதுனு முடிவு பண்ணிட்டீங்களா?
தோழமையுடன்
பைத்தியக்காரன்
நன்றி பைத்தியக்காரன்.
//வாராவாரம் சட்டை மாத்தறதுனு முடிவு பண்ணிட்டீங்களா?//
ஆமாங்க. சுத்தமாக இருக்கறது நல்லதில்லையா? அப்புறம்...
இது என்னோட இன்னொரு வலைப்பதிவு. எனக்குப் பிடிச்ச விஷயங்களை பகிர்வதற்காக எப்பவோ செஞ்சு வெச்சது. நடுவுல டச் விட்டுப் போச்சு.
இது ஒரு தகவலுக்கு.
எனது கட்டுரையை இங்கே ’சுட்டி’க் காட்டியமைக்கு நன்றி சுரேஷ் கண்ணன்!
என்றும் அன்புடன்,
என். சொக்கன்,
பெங்களூர்.
Post a Comment