சத்யஜித் ரே எனும் மகா உன்னதக் கலைஞனை, இந்தியத் திரைப்பட இயக்குநரை நீங்கள் இதுவரை அறிந்திருக்கவில்லையெனில் இந்தக் கட்டுரை உங்களுக்கானது. ரேவை மேம்பாக்காக அறிந்தவர்களுக்கும் இதில் உள்ள சில நுண்மையான தகவல்கள் உபயோகமாக இருக்கக்கூடும். கட்டுரையின் உள்ளடக்கத்தின் மீது எனக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும் அடிப்படையில் இது நல்லதொரு அறிமுகம் என்பதால் 'கீற்று'வில் வெளிவந்த (புத்தகம் பேசுது'வில் பிரசுரமானது) அஜயன் பாலா எழுதின இந்தக் கட்டுரையை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
நன்றி: கீற்று / புத்தகம் பேசுது
வருக நண்பரே!
இலக்கியம், திரைப்பட நிகழ்ச்சிகள், பிடித்த வலைப்பதிவுகள் ... போன்றவற்றை இங்கே பகிர்ந்து கொள்வேன்.
Followers
வருகையாளர்
Blog Archive
பிச்சைப்பாத்திரம்
Labels
- NFDC Weekend Classic Film (4)
- Reservoir Dogs (1)
- அஞ்சலிக் கூட்டம் (1)
- அறிவிப்பு (8)
- அனுபவம் (2)
- இசை (1)
- கட்டுரை (1)
- காஞ்சிவரம் (1)
- சத்யஜித் ரே (1)
- சாரு (1)
- சினிமா (5)
- நகைச்சுவை (1)
- பரிந்துரை (2)
- புத்தகம் (3)
- பொது (1)
- மொக்கை (1)
- விழா (1)
Labels:
கட்டுரை,
சத்யஜித் ரே,
சினிமா,
பரிந்துரை
comments (7)
Labels:
இசை,
சாரு,
சினிமா,
பரிந்துரை
comments (6)
உயிர்மை நவம்பர் 09 இதழி்ல் 'தமிழ் சினிமா பாடல்கள் - ஓரு பண்பாட்டு வீழ்ச்சியின் அடையாளம்' என்றொரு கட்டுரை சாரு நிவேதிதாவால் எழுதப்பட்டிருக்கிறது. தமிழச் சமூகம் தம்முடைய கலாச்சார அடையாளங்களை மெல்ல மெல்ல இழந்து அம்மணமாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் இக்கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதை உங்களுக்கு பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.
வணிகச் சகதியில் அமிழ்ந்து கொண்டிருக்கும் தற்போதைய தமிழ்ச்சினிமாவில் 'பாடல்கள்' என்பதே அபத்தம் என்றாலும் அதுவும் அர்த்தமின்மையின் உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கும் நிலையை தம்முடைய பிரத்யேகமான இரக்கமேயில்லாத பகடியான மொழியில் நம்முன் வைக்கிறார் சாரு. அதிலிருந்து சில பகுதிகளை மாத்திரம் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
... ஒட்டு மொத்தமான philistine சமூகச் சூழல். தமிழ்நாட்டில் மட்டுமே காணக்கூடிய இந்தச் சூழல் தனக்கு அறிமுகமாகும் எதையுமே வடிகட்டி அதன் நீர்த்துப் போன வடிவத்தையே தனக்கென்று எடுத்துக் கொள்கிறது....
...என்னதான் ஜனரஞ்சக பைங்கிளி கலாச்சாரமாக இருந்தாலும் அதில் கொஞ்சமாவது தமிழ் உணர்வும் தமிழ் வாழ்க்கையும் இருக்க வேண்டும்; தமிழ் வாழ்க்கையின் வேர் இருக்க வேண்டும்; தமிழ் நாட்டின் வெகுஜன கலாச்சாரத்தில் அப்படி இருக்கிறதா?
முழுக்கட்டுரையையும் உயிர்மை நவம்பர் 09 இதழிலோ அல்லது சாருவின் தளத்திலோ சென்று வாசியுங்கள்.
Subscribe to:
Posts (Atom)